Sunday, December 26, 2010

தொடர்கிறது...

ப்ளாக் ஆரம்பிச்சு முதன் முறையா தொடர்பதிவுக்கு அழைப்பு மஹியிடமிருந்து...கேள்வியெல்லாம் ஈஸி மாதிரிதான் இருக்கு... பதில்களைப் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க...


1. Are you a vegetarian or have you thought of being one?


    No chance... cudnt even think of being a veg... But I'm not a bulk eater... Like to have just one  or two pieces.


2. Who inspired you to cook?


    mmm... Time compelled me to cook myself after marriage... As my hubby likes mostly traditional recipes, I just follow methods from mom & m-in-law.


3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?


   My fav. festivals fall on the days of Eid...The main thing would be meeting relatives and friends after the morning prayer... and yes... the next thing is briyani and then going out in the evening.


4.Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?


 It is just another day in a year for me... As it is a holiday, I use it to meet friends/relatives and watch only interesting prgms on TV.


5.If someone were to ask you to bring a dessert to a party,what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?


Surely I'll opt for a home-made item, selected from website... Any easy and healthy recipe would be of my choice.


6.How will you celebrate your next birthday?


  Cannot call it as a celebration....As usual... with the prayers from my hubby, son, parents and ps-in-law.. and friends.


7.Do you have a New Year resolution and will you be sticking to it?


   There might be some resolutions but not with the name of New Year... I try to stick to them most of the times.


அம்புட்டுதான்... இந்த கேள்விகளுக்கு என்னோட பதில்களிலுருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நீதி என்னன்னு சொல்லுங்க.....(விடு ஜூட்).




ஆறு வருடங்களுக்கு முன் இதே நாளில் ஸுனாமிக்கு தங்கள் உயிரையும் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்தவர்களுக்காகவும் இனி இதுபோல் அசம்பாவிதங்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்கவும் இறைவனிடம் ப்ரார்த்திப்போம்.

Monday, December 20, 2010

அஞ்சாதே...

என்னைக் கண்டால் என் பையன் பயப்படுவான்னு சொல்லியிருந்தேன் இல்லையா.... (அப்படியான்னெல்லாம் கேக்கக்கூடாது...) அவனைப் பார்த்து நான் பயந்த நிகழ்வுகளில் ஒண்ணைப் பத்தின பதிவுதானிது.


எங்கவீட்டு அய்யாதுரை (என் ரங்க்ஸ்க்கு நான் வச்ச பேரு..பெரியவன் பெரியதுரை,சின்னவனுக்கு சின்னதுரை) டீவிக்குள்ள (No.. no questions) போயிருந்த சமயம் ...நான் கிச்சனில் பிஸி... பெரியவன் சத்ததையே காணோமேன்னு திடீர்னு ஞாபகம் வர ரூமில் எட்டிப் பார்த்தால் ஒரு மாஸ்கிங் டேப்பை எதிலோ ஒட்டி வேஸ்ட் செய்து கொண்டிருந்தான்... ரொம்பவும் மும்முரமாக...


சரி...இப்ப கேட்டால் தரமாட்டான்னு... நைசாக பேசி அவனை ரூமிற்கு வெளியே அனுப்பியாச்சு...அவன் வருவதற்குள் டேப்பை கப்போர்டின் மேல் வச்சிடலாம்னு வைத்து கொண்டிருக்கும்போதே திரும்பி வந்துவிட்டான். அவனுக்கு தெரியாமல் வைத்துவிடவேண்டுமே என்று அவசர அவசரமாக கப்போர்டின் மேல் நான் வைப்பதை அவன் பார்த்துவிட... ஆ ஆ ஆ என்று அவன் அலற(பொதுவா அவனுக்கு எதுவும் வேணுன்னா அழ மாட்டான்..அலறல்தான்) ஏற்கனவே இருந்த பதற்றத்தில் அவன் அலறலைக் கேட்டு நான் அலற ....கை தவறியதால் கப்போர்டின் மேல் காலங்காலமாக அவனுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்த அவனுடைய பொருட்கள் எல்லாம் கீழே விழ ... என்னவோ ஏதோவென்று அய்யாதுரை ஓடி வர ... என் இதயம் அன்னிக்கு துடித்த துடிப்பு இருக்கே... அப்பா.. இப்பவும் ஞாபகமிருக்கு.


எல்லாவித தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது என்ற குர் ஆன் வசனத்தை நான் எப்போதும் அதிகம் விரும்பி நம்புவேன்...சரி...இந்த நிகழ்ச்சியில் யாருக்கு என்ன நன்மைன்னு கேக்கறீங்களா? என் பையனுக்குதாங்க...அன்னிக்கு வரை பூச்சாண்டி எடுத்துட்டு போயிட்டான்னு அவனை கஷ்டப்பட்டு நம்ப (ஒளிச்சு) வச்சிருந்த பொருளெலாம் கப்போர்ட் மேலிருந்து விழுந்தத பார்த்து அவனுக்கு சந்தோஷத்தைப் பார்க்கணுமே...ஹ்..ம்... அவன் என்னைப் பார்த்த பார்வையைப் பார்த்தா ...நீதான் அந்த பூச்சாண்டியான்னு கேக்கற மாதிரி இருந்துச்சு...


இதிலயிருந்து நாம தெரிஞ்சிக்க வேன்டியது என்னன்னா ((இதுக்கெல்லாம் ஒரு மாரலா...இதெல்லாம் ரொம்ப ஓவர்னு திட்டாதீங்க...பையனுக்கு ஏதாவது ஒரு அட்டு கதை சொல்லும்போது கூட அதில ஒரு நீதி சொல்லிச் சொல்லிப் பழக்கமாயிடுச்சு...) எந்த விஷயத்தையும் பதற்றமில்லாம பொறுமையா அதுவும் யாருக்கும் பயப்படாம செய்யணும்.

Monday, December 13, 2010

தெரியும்...ஆனா தெரியாது

பாளையாங்கோட்டையில் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சுட்டு சும்மா பந்தாவா காலேஜிலயும் சேர்ந்தாச்சு. காலேஜ் வகுப்பு தோழிகள் (தமிழ் மீடியத்தில் படிச்சவங்க) ஆங்கிலத்தில் ஏதாவது டவுட்டுன்னா என்கிட்ட கேப்பாங்க... எனக்கு தெரியாத வார்த்தைன்னாலும் எப்படியாவது அந்த வார்த்தை இடம்பெற்ற வாக்கியத்தை, முடிஞ்சா பாராவையே படிச்சு ஒரு வழியா அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுவேன். 'அப்படியா'னு சந்தேகம் கேட்டவ இன்னும் குழம்பி போறத பத்தியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது.எப்படியோ, தெரியாதுன்னு சொல்லாம, சமாளிச்ச திருப்தி.


டிகிரி முடிச்சு சில மாதங்களில் வேலையிலயும் சேர்ந்தாச்சு அதுவும் அப்பா வேலை பார்த்த வெளிநாட்டுல. கொலீக்ஸ் கூடயும் சரளமா பேசி பழகியாச்சு. ஆனா ஃபோன் அடிச்சா (official calls) வயித்தில கரைக்கும் பாருங்க புளி ...தமிழே மறந்துடும்... அந்தளவுக்கு ஃபோன்ல பேச பயம். ஏதாவது ஃபைல் அல்லது தகவல் கேட்டு யாராவது ஃபோன் பண்ணினா தெரிஞ்ச மேட்டரா இருந்தாலும் சொதப்பிடுவேன். தெரியாத மேட்டர்னா...அவ்வளவுதான்... அத சொல்லி இத சொல்லி நான் குழம்பி...தகவல் கேட்டவங்களையும் குழப்பி ஒரே சொதப்பல்ஸ் ஆஃப் செப்பல்ஸ் தான். தெரியாததை தெரியாதுன்னு சொன்னா எதும் திட்டிடுவாங்களோன்னு ரொம்ப பயம்.  இப்படியே ஒன்னு, ரெண்டு வாரம் ஓடிடுச்சு.


அப்பதான் என் பக்கத்து ஸீட்ல இருந்த ஒரு ஸ்டாஃப் அவங்களுக்கு வந்த ஃபோன் கால்ஸ் அட்டன்ட் பண்ணும்போது ஒரு விஷயம் கவனிச்சேன். அவங்களுக்கு தெரியாத விஷயத்தை, தெரிந்த விஷயத்தைத் தெரியுன்னு சொல்றத விட, ரொம்ப கேஷுவலா தெரியாதுன்னு சொல்வாங்க.


அப்பதான் எனக்கு உறைச்சுது. தெரிந்த விஷயத்தை தெரியுன்னு சொல்றதுக்கு தைரியம் தேவையில்ல. தெரியாத விஷயத்த தெரியாதுன்னு சொல்றது தான் தைரியசாலி, புத்திசாலிக்கு :)) அழகுன்னு. அதிலருந்து எனக்கு தெரியாத விஷயத்த யாராவது என்கிட்ட கேட்டா 'எனக்கு தெரியாது... கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா தகவல் சேகரிச்சுட்டு சொல்றேன்' அப்படீன்னு கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சேன். அவங்க சரின்னு சொன்னா டேட்டா கலக்ட் பண்ணி தெரிவிக்கறது இல்லாட்டி ரொம்ப நல்லதுன்னு நினைச்சுக்கிறது. அதுக்கப்புறம் அந்த ஆபீஸ்ல ஒரு மூணு வருஷம் பழந்தின்னு கொட்டை போட்டு, அதுக்கப்புறம் கொட்டை போட இடமில்லாததால வேலைய விட்டுட்டேன்;)).

Thursday, December 9, 2010

நானும் என்டர் தட்டிட்டேனுங்க

என்னாடா..என்டர் தட்டிட்டாளா? ஏன் இவ்வளவு நாளா என்டர் பட்டனைத் தேடிட்டு இருந்தாளான்னெல்லாம் யோசிக்காம ப்ளாக் உலகிற்கு வருக வருகன்னு ரெண்டு வார்த்தை சொன்னீங்கன்னா ஏதோ நானும் ப்ளாக் கடலுக்குள்ள நீந்திக்களிக்கலாம்.


அனுபவங்கள்னு பட்டியல் போடுற அளவுக்கெல்லாம் நான் பெரிய அனுபவசாலி கிடையாது... அப்பாம்மா பொத்தி பொத்தி வளர்த்துட்டாங்க.... ஆனாலும் கணவருக்கும் பிள்ளைக்கும் என்னைக் கண்டால் கொஞ்சமாவது பயம் வர்ற மாதிரிதான் டீல் பண்றது....அப்ப டைட்டில்ல மட்டும் 'சொந்த கதை நொந்த கதை'ன்னு போட்டிருக்குன்னு பார்க்கறீங்களா?...அது ப்ளாக் உருவாக்கும்போது இருந்த மூடுல அப்படி போட்டாச்சு...


அப்ப என்னதான் எழுதப் போறேன்னு கேட்டா ...சாரி ....எனக்கே தெரியல...அருமையான மொக்கைகள் கொண்ட ப்ளாக் அப்படீன்னு யாராவது போட்டி நடத்துனா அதுல(யாவது) சேரலாம்ல..


ஷ்...அப்பா...அறிமுக பதிவு போடுறதுக்குள்ளாவே பசிக்க ஆரம்பிச்சுடுச்சு...அதுனால இத்தோடு விடை பெறுகிறேன்..டா டா.